Type Here to Get Search Results !

நன்மைகள் பல தரும் நுங்கு


மறைந்து வரும் பராம்பரியங்களில் பனைரமும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டின் மாநில மரம்மாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்கவாய்ப்பில்லை. 

அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது. வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. 

பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. நுங்கில் அதிகஅளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம். 

நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே. மேலும் நுங்கை சாப்பிட்டடன் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்தசோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து. 

நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad