Type Here to Get Search Results !

கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம்

  கணினியில் Virus நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான்.  ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.






இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , Browsing Center போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக Virus உள்ள USB Device மூலம் கணினிக்குள் Virus புகுத்தி விட வாய்ப்பு உண்டு.

நம்முடைய கணினியில் உள்ள விவரங்களை நாம் கணினியில் இல்லாத நேரம் பிறர் சில நிமிடங்களில் USB Copy செய்து எடுத்து விடும் அபாயமும் உண்டு. இது போன்ற தருணங்களில் கணினியில் உள்ள USB Drive களை முடக்கி (Disable) செய்து வைக்க வேண்டிய கட்டாயம் வரும்.


கணினியின் BIOS Settings சென்று USB Port Disable செய்யலாம். ஆனால் அது நாம் USB Mouse, USB Keyboard, USB Printer போன்றவற்றை உபயோகித்தால் அவற்றையும் முடக்கி விடும்.USB Storage Device களை மட்டும் முடக்க வேண்டும்.

இதனை இரண்டு வழிமுறைகளில் செய்யலாம்.

Start பட்டனை கிளிக் செய்து Run கிளிக் செய்யுங்கள். அதில் regedit என்று கொடுத்து எனத் தட்டுங்கள். Start --> Run --> regedit . Registry Editer தோன்றும்.

அதில் HKEY_LOCAL_MACHINE --> SYSTEM --> CurrentControlSet --> Services --> UsbStor செல்லுங்கள். வலது புறம் வரும் Option களில் "Start" என்பதனை Double Click செய்யுங்கள்.

தோன்றும் விண்டோவில் "Value Data" என்பதில்நீங்கள் USB Storage Drive களை Disable செய்ய விரும்பினால் "4" என்று கொடுக்கவும். USB Storage Drive களை Enable செய்ய விரும்பினால் "3" என்று கொடுக்கவும்.

ரெஜிஸ்டரி எடிட்டரை மூடி விட்டு கணினியை Restart செய்யவும். உங்கள் தேர்வின்படி USB Storage Drive enable/disable ஆகும்.

இந்த முறை உங்களுக்கு கடினமானதாக தோன்றினால் ஒரு எளிய முறையை பார்ப்போம். கீழ்காணும் இரண்டு கோப்புகளையும் தரவிறக்கி கொள்ளுங்கள்.

USB Storage Drive களை Enable செய்ய - EnableUSBDrive.regUSB Storage Drive களை Disable செய்ய -DisableUSBDrive.regஉங்கள் தேவைக்கான கோப்பை ஓபன் செய்தால் USB Enable / Disable ஆகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad